/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் பூ மிதி விழா
/
சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் பூ மிதி விழா
ADDED : பிப் 15, 2025 02:06 AM
சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் பூ மிதி விழா
அரவக்குறிச்சி:சின்னதாராபுரம் அருகே உள்ள, சூடாமணி மாசாணி அம்மன் கோவிலில், 27ம் ஆண்டு பூ மிதி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரத்தை அடுத்த, சூடாமணி பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான, மாசாணி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு குண்டம் திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
செய்யப்பட்டு பூஜைகள் நடந்து
வந்தன. நேற்று எல்லமேடு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்து மதியம், 12;00 மணியளவில் குழந்தைகளுடன் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
பூக்குழி நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீ மாசாணி அம்மன் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் செய்தனர்.