/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்சேகரிப்பு; உறுதி மொழி ஏற்பு
/
பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்சேகரிப்பு; உறுதி மொழி ஏற்பு
பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்சேகரிப்பு; உறுதி மொழி ஏற்பு
பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்சேகரிப்பு; உறுதி மொழி ஏற்பு
ADDED : பிப் 23, 2025 01:37 AM
பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்சேகரிப்பு; உறுதி மொழி ஏற்பு
குளித்தலை: குளித்தலை, கடம்பர் கோவிலில் நேற்று கரூர் மாவட்ட மாசு கட்டுப்
பாட்டு வாரியம் மற்றும் குளித்தலை நகராட்சி இணைந்து நடத்தும், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி கமிஷனர் நந்தகுமார் தலைமை வகித்தார். நகராட்சி பணியாளர்கள், தனியார் பள்ளி சாரண மாணவ, மாணவியர் மற்றும் துாய்மை பணியாளர்கள், சில நாட்களுக்கு முன்பு குளித்தலை கடம்பர் கோவில் ஆற்றங்கரை அருகே நடந்த, தைப்பூசத்தின் போது பொதுமக்களால் விட்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
துாய்மை பணியாளர்கள் நேற்று பல்வேறு கழிவு குப்பைகளை, சாக்கு பைகளில் சேகரித்து அந்த இடத்தை துாய்மைப்படுத்தினர். முன்னதாக நகராட்சி கமிஷனர் நந்தகுமார், 'பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம், மீண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்துவோம்' என, பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நகராட்சி துாய்மை பணியாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்
கள் கலந்து கொண்டனர்.