/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் சாரண சாரணியர் மாநில விருதுக்கு தேர்வு முகாம்
/
குளித்தலையில் சாரண சாரணியர் மாநில விருதுக்கு தேர்வு முகாம்
குளித்தலையில் சாரண சாரணியர் மாநில விருதுக்கு தேர்வு முகாம்
குளித்தலையில் சாரண சாரணியர் மாநில விருதுக்கு தேர்வு முகாம்
ADDED : பிப் 26, 2025 01:30 AM
குளித்தலையில் சாரண சாரணியர் மாநில விருதுக்கு தேர்வு முகாம்
குளித்தலை: குளித்தலையில் உள்ள தனியார் பள்ளியில் சாரண, சாரணியர் மாநில விருதுக்கான தேர்வு முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் விழா துவங்கியது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட ஆணையர்கள் பவ்யா, தண்டாயுதபாணி, புருஷோத்தமன், நித்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில், மாநில தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட சரவணன் மற்றும் விஜயா ஆகியோர் முதன்மை தேர்வர்களாக செயல்பட்டனர். முகாமில் சாரணர் இயக்க பாடல்கள், சட்டம், உறுதிமொழி, கொடி, வணக்கம், குறிக்கோள், முதலுதவி, மதிப்பீடு, நில வரைபடம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் சாரணர்கள், 122 பேரும், சாரணியர், 154 பேரும் பங்கேற்றனர். உதவி தேர்வர்களாக வசந்தி, கிருஷ்ணமூர்த்தி, ஜெயலட்சுமி, சிவானந்தம் உள்ளிட்ட பலர் பணியாற்றினர்.