/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்கள்நடமாட்டம் இருந்தால் புகார் அளிக்கலாம்'

ADDED : மார் 02, 2025 01:34 AM
'கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்கள்நடமாட்டம் இருந்தால் புகார் அளிக்கலாம்'
கரூர்:அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத்தரகர்கள் நடமாட்டம் இருந்தால் புகார் அளிக்கலாம்.இது குறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடியில் விளைந்த நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சன்னரக நெல் (கிரேடு ஏ) குவிண்டால் ஒன்றுக்கு, 2,450 ரூபாய், குறைந்த பொது ரக நெல், 2,405 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய, வி.ஏ.ஓ., சான்று, பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 ஆகியவற்றுடன் நேரில் சென்று, கைரேகை பதிவு மூலம் பதிவு செய்து, தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யலாம்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற விற்பனையாளர்களோ, இடைத்தரகர்களோ அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு அனுமதியில்லை. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வியாபாரிகள், இடைத்தரகர்கள் நடமாட்டம் இருந்தால், 1800 5993 540 என்ற தொலை பேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.