/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்குவாரி தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகலெக்டர் முன்னிலையில் விசாரணை
/
கல்குவாரி தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகலெக்டர் முன்னிலையில் விசாரணை
கல்குவாரி தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகலெக்டர் முன்னிலையில் விசாரணை
கல்குவாரி தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகலெக்டர் முன்னிலையில் விசாரணை
ADDED : மார் 13, 2025 02:24 AM
கல்குவாரி தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகலெக்டர் முன்னிலையில் விசாரணை
கரூர்:- நீதிமன்ற உத்தரவின்படி, கல்குவாரி தொடர்பாக, கரூர் கலெக்டர் முன்னிலையில் விசாரணை நடந்தது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட ஈசநத்தத்தில், தனியார் நிறுவன கல்குவாரி செயல்பட்டு வந்தது. இது சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும், வெடி பொருட்களை பயன்படுத்தி, கல் உடைக்கும் போது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக, சென்னை உயர்நீதி
மன்ற மதுரை கிளையில், அப்பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்து, கரூர் கலெக்டர் முன்னிலையில் இரண்டு தரப்பினர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, 2024 நவ., 29ல், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, இரண்டு தரப்பினரும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, கரூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தங்கவேல் முன்னிலையில், ஊர் மக்களுடன் வந்த ஜெயராமன் மற்றும் தனியார் நிறுவனம் தரப்பில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.