/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னை மற்றும் பனை பாதுகாப்புகூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தென்னை மற்றும் பனை பாதுகாப்புகூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்னை மற்றும் பனை பாதுகாப்புகூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்னை மற்றும் பனை பாதுகாப்புகூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 02:11 AM
தென்னை மற்றும் பனை பாதுகாப்புகூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:தென்னை மற்றும் பனை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில், மாநில கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்க வேண்டும். மதுக்கொள்கையில் பீகார் மாநிலத்தை பின்பற்ற வேண்டும், போதை பொருட்களை ஒழிக்க வேண்டும், தமிழக அரசு மதுக்கடைகளை நடத்தக்கூடாது, பனை, தென்னை மரங்களை அழிவில் இருந்து, காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், நா.த.க., மாநில வழக்கறிஞர் பாசறை
செயலாளர் நன்மாறன், தொகுதி செயலாளர் செங்குட்டுவன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்பட, பலர் பங்கேற்றனர்.
பிறகு, போராட்டத்தில் பங்கேற்ற, விவசாயிகள் கள் மீதான தடையை நீக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினர்.