/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எரியாத உயர்மின் கோபுர விளக்குஇரவு நேர வாகன ஓட்டிகள் தவிப்பு
/
எரியாத உயர்மின் கோபுர விளக்குஇரவு நேர வாகன ஓட்டிகள் தவிப்பு
எரியாத உயர்மின் கோபுர விளக்குஇரவு நேர வாகன ஓட்டிகள் தவிப்பு
எரியாத உயர்மின் கோபுர விளக்குஇரவு நேர வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : மார் 19, 2025 01:23 AM
எரியாத உயர்மின் கோபுர விளக்குஇரவு நேர வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர்:கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் தவிட்டுப்பாளையத்தில் மதுரை, -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காவிரி ஆற்றின் கரையோரம் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் போலீசாரின் வாகன சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இப்பகுதியில் இருந்து புகழூர், கட்டிப்பாளையம், கோம்புபாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், புகழூர் டி.என்.பி.எல்., காகித நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், தனியார் சர்க்கரை ஆலை மற்றும் டி.என்.பி.எல்., சிமென்ட் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், வெற்றிலை, கோரை விவசாயிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லுாரி வாகனங்களும் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை வழியாக பஸ் உள்பட ஏராளமான கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றுப்பாலத்தை, கடந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால், அடிக்கடி தவிட்டுப்
பாளையம் பகுதியில் விபத்துகள் நடந்தன. அப்பகுதி இருள் சூழ்ந்திருந்ததால், உயர்மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த, 15 நாட்களுக்கு மேலாக, அதில் விளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், அவதிப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, போதிய வெளிச்சம் இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் காத்திருக்கிறது. பெரும் அசம்பாவிதம் நிகழும் முன் உயர்மின்கோபுர விளக்கை சீரமைத்து விளக்குகளை எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.