sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்'

/

'ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்'

'ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்'

'ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்'


ADDED : ஏப் 02, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்'

கரூர்:''ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் அருகில், உப்பிடமங்கலம், லிங்கத்துார் ரேஷன் கடைகளில், கலெக்டர் தங்கவேல் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கூறியதாவது:

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில், 403 முழு நேரம், 233 பகுதி நேரம் என மொத்தம், 636 ரேஷன் கடைகள் செயல்

படுகின்றன. கரூர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டை, அந்த்யோதயா அன்னயோஜனா அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, போலீஸ், வன காவலர் அட்டைகள் என, மூன்று லட்சத்து, 37 ஆயிரத்து, 531 ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.

அலுவலர்கள் தொடர் ஆய்வுஒவ்வொரு மாதமும், 5,264.31 மெ.டன் அரிசி, 435.07 மெ.டன் சர்க்கரை, 132.94 மெ.டன் கோதுமை, 24 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய், 281.53 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் இரண்டு லட்சத்து, 85,934 லிட்டர் பாமாயில் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தரம், அளவு மற்றும் கடைகள் உரிய நேரத்தில் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் இலவச சேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 1967, 1800-425-5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும், அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்க, 1800-599-5950, 9677736557 என்ற வாட்ஸ் ஆப் எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறினார்.

ஆய்வின் போது கரூர் தாசில்தார் குமரேசன், வழங்கல் அலுவலக பறக்கும் படை தாசில்தார் கண்ணன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us