/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாதுமீனவர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

ADDED : ஏப் 04, 2025 01:06 AM
மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாதுமீனவர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
கரூர்:மாயனுார் கதவணை அருகில், மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாது என, குளித்தலை, முசிறி உள்ளாட்டு மீனவர்கள் சங்கம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கிருஷ்ணராயபுரம் அருகில், மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து கொண்டு வந்து கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது காவிரி, -வைகை,- குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் நடக்கிறது. இங்கு, வாய்க்கால் வெட்டும் பணி நடக்க இருப்பதால், மீன் கடை போடக்
கூடாது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, கடைகள் போடுவதை தவிர்த்து விடுகிறோம். இது, நிரந்தரமான தடையாக இருக்கக்கூடாது. இப்பணிகள் முடிவடைந்தவுடன், மீண்டும் நிரந்தரமாக கடைகள் அமைத்து கொள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.