/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓடும் பஸ்சில் இருந்து வாலிபரைகீழே தள்ளிய கண்டக்டர் மீது வழக்கு
/
ஓடும் பஸ்சில் இருந்து வாலிபரைகீழே தள்ளிய கண்டக்டர் மீது வழக்கு
ஓடும் பஸ்சில் இருந்து வாலிபரைகீழே தள்ளிய கண்டக்டர் மீது வழக்கு
ஓடும் பஸ்சில் இருந்து வாலிபரைகீழே தள்ளிய கண்டக்டர் மீது வழக்கு
ADDED : ஏப் 08, 2025 01:42 AM
ஓடும் பஸ்சில் இருந்து வாலிபரைகீழே தள்ளிய கண்டக்டர் மீது வழக்கு
கரூர்:கரூர் அருகே, ஓடும் தனியார் பஸ்சில் இருந்து வாலிபரை கீழே தள்ளிய, கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், பாகநத்தம் வெடிக்காரன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 40; இவர் கடந்த, 6ல் பி.டி., என்ற தனியார் பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது, 100 ரூபாய் கொடுத்த சுரேஷ், கண்டக்டர் பிரவீன்குமாரிடம், 25 ரூபாய் டிக்கெட் கேட்டுள்ளார். 100 ரூபாய்க்கு சில்லரை இல்லை என கூறி, சுரேைஷ பஸ்சில் இருந்து கீழே இறங்கு என பிரவீன்குமார் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில், ஆத்திரமடைந்த பிரவீன்குமார், கோடங்கிப்பட்டியில் பஸ் சென்று கொண்டிருந்த போது, சுரே ைஷ பிடித்து வெளியே தள்ளியுள்ளார். அதில், கீழே விழுந்த சுரேஷ் படுகாயம் அடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, சுரேஷ் மனைவி மணிமேகலை, 31, கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் கண்டக்டர் பிரவீன்குமார் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.