/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் நீத்தார் நினைவு அஞ்சலி
/
கரூர் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் நீத்தார் நினைவு அஞ்சலி
கரூர் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் நீத்தார் நினைவு அஞ்சலி
கரூர் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் நீத்தார் நினைவு அஞ்சலி
ADDED : ஏப் 15, 2025 02:05 AM
கரூர்:
கரூர் அருகே, தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில், நேற்று நீத்தார் நினைவு அஞ்சலி நடந்தது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த கப்பலில் கடந்த, 1944ம் ஆண்டு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்த சென்ற, 64 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்., 14ல், நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதில், மாநில அளவில் தீயணைக்கும் பணியின் போது, இறந்த வீரர்களுக்கும் நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கரூர் அருகே, வேட்டமங்கலத்தில் தீயணைப்பு துறை தற்காலிக பயிற்சி மையத்தில், நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் தலைமையில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, உதவி மாவட்ட அலுவலர்கள் கருணாகரன், கோமதி, திருமுருகன், அணி வகுப்பு தலைவர் ஜெயேந்திரன், மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை நிலையத்திலும், நிலைய அலுவலர் சரவணன் தலைமையில், இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
'