/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகள்: அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : மே 20, 2025 02:23 AM
கரூர், மழை பெய்ய தொடங்கிய நிலையில், கரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் அருகே கொளந்தானுார் பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி, கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், கழிவுநீர் வாய்க்கால் தெரியாத அளவில், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீர் வாய்க்காலில் செல்லாமல், சாலையில் ஓடும் அபாயம் உள்ளது.
சில மாதங்களுக்கு முன், கரூர் நகரில் பலத்த மழை பெய்த போது, வாய்க்காலில் இருந்து கழிவுநீர், மழைநீருடன் வெளியேறி திருச்சி சாலையில் ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தற்போது மாவட்டம்
முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கரூர் நகரிலும் கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதிகளவில் மழை பெய்யும் போது, வாய்க்காலில் இருந்து கழிவுநீர், மழைநீர் திருச்சி சாலையில் ஓடுவதை தடுக்க, கொளந்தானுார் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் உள்ள, செடிகளை அகற்ற கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி
நடவடிக்கை எடுப்பது அவசியம்.