/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ஆயுதப்படை வளாகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார்
/
கரூர் ஆயுதப்படை வளாகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார்
கரூர் ஆயுதப்படை வளாகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார்
கரூர் ஆயுதப்படை வளாகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார்
ADDED : அக் 20, 2024 01:53 AM
கரூர், அக். 20-
கரூர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய பகுதிகளான தமிழகம், பதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் கடந்த, 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் வகையில், கரூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் மீட்பு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி கிகிச்சை பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதை, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.