/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூளைச்சாவு அடைந்த பெண்ணின்உடல் உறுப்புகள் தானம்
/
மூளைச்சாவு அடைந்த பெண்ணின்உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜன 17, 2025 01:11 AM
மூளைச்சாவு அடைந்த பெண்ணின்உடல் உறுப்புகள் தானம்
கிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகள் தானமாக தரப்பட்டதால், இறந்த பெண்ணுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சேகர் மனைவி பாப்பாத்தி என்ற சோமவள்ளி. இவர் கடந்த வாரம், சென்னைக்கு தனது மகள் வீட்டிற்கு சென்ற போது, விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
பாப்பாத்தியின் உடல் உறுப்புகள், சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்புகள் தானமாக வழங்கியதால், அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்னையில் இருந்து பழையஜெயங்கொண்டம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாப்பாத்தி என்ற சோமவள்ளிக்கு, கிருஷ்ணராயபுரம் வருவாய்த்துறை நிர்வாகம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகர், மண்டல துணை தாசில்தார் சந்தான செல்வம், மற்றும் வருவாய் ஆய்வாளர், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.