/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புங்காற்று நெடுகையில் நாணல் அகற்ற நடவடிக்கை தேவை
/
புங்காற்று நெடுகையில் நாணல் அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஜன 24, 2025 01:15 AM
கிருஷ்ணராயபுரம்,:வீரவள்ளி பகுதி வழியாக செல்லும், புங்காற்று நெடுகை பகுதிகளில் அதிகமான நாணல் செடிகள் வளர்ந்துள்ளது. இவைகளை அகற்ற வேண்டும்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி குளத்தில் இருந்து புங்காற்று நெடுகை கோட்டமேடு வரை செல்கிறது. குளத்தில் மழை காலங்களில், நீர் வரும் போது புங்காற்று நெடுகை வழியாக கோட்டமேடு வடிகால் வாய்க்காலில் கலக்கிறது. புங்காற்று நெடுகை பகுதிகள் கடந்த ஆண்டு துார் வாரப்பட்டது. இதனால் நெடுகை பகுதிகளில் உள்ள பல இடங்களில், மழை நீர் சேமிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
தற்போது, மழை நீர் வடிந்து செல்லும் வழித்தடங்களில், அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் வடிகாலில் வடிநீர் வடிந்து செல்வதில் பாதிப்பு உள்ளது. எனவே, புங்காற்று நெடுகை பகுதிகளில் வளர்ந்து வரும், நாணல் செடிகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.