/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 01:16 AM
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி,:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில். நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் இறந்துவிட்டால், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை கிராம பணி தவிர, மாற்று பணிகளுக்கு பயன்
படுத்தக் கூடாது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அரவக்குறிச்சி வட்ட தலைவர் அன்பரசு, செயலாளர் கிருபா, பொருளாளர் கார்த்திகா, புகழூர் வட்ட தலைவர் ஜெகநாதன், செயலாளர் விசாலாட்சி, பொருளாளர் ராஜாமணி உள்பட பலர் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், அரவக்குறிச்சி முன்னாள் வட்ட தலைவர் குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை
வலியுறுத்தி பேசினர். மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.