/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 01:41 AM
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர், செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களில் கணக்கிட வேண்டும் என கூறிய, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாநில செயலாளர் குப்பு சாமி, மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட துணைத் தலைவர்கள் ரமேஷ், நல்லசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.