/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட பா.ஜ.,புதிய தலைவர்: இன்று அறிவிப்பு
/
கரூர் மாவட்ட பா.ஜ.,புதிய தலைவர்: இன்று அறிவிப்பு
ADDED : ஜன 25, 2025 01:24 AM
கரூர் மாவட்ட பா.ஜ.,புதிய தலைவர்: இன்று அறிவிப்பு
கரூர், :கரூர் மாவட்ட பா.ஜ.,வுக்கு, புதிய தலைவர் இன்று அறிவிக்கப்பட உள்ளார்.தமிழகம் முழுவதும், பா.ஜ., அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கட்சி ரீதியாக, 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு, மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். கரூர் மாவட்ட பா.ஜ., புதிய தலைவரை தேர்வு செய்ய கடந்த, 22ல் கட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில், 59பேர் துண்டு சீட்டு மூலமாக, தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவித்த, 20க்கும் மேற்பட்டவர்களில் ஒருவரை, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவரை தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
இறுதியாக, நேற்று கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், மாவட்ட தலைவர் பதவிக்கு மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், தேர்தல் பொறுப்பாளர் சேதுராமன் ஆகியோரிடம், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா, தற்போதைய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இன்று மதியம், 3:00 மணிக்கு கரூர்-கோவை சாலை கொங்கு திருமண மண்டபத்தில் நடக்கவுள்ள விழாவில், வேட்புமனு தாக்கல் செய்த மூன்று பேரில், ஒருவர் கரூர் மாவட்ட பா.ஜ., வுக்கு, புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்று கொள்வார் என, கரூர் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்,