/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : பிப் 02, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
குளித்தலை :குளித்தலை பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கிராமிய கலைக்குழுவினரின் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரஷ்யாசுரேஷ் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,க்கள் சையது அலி, ராஜகோகிலாதேவி, தலைமை ஏட்டு நரேஷ்குமார், முதல் நிலை ஏட்டு சத்தியமூர்த்தி மற்றும் கலைக்குழுவினர் பங்கேற்றனர். பள்ளி மாணவியர், பஸ் பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.