ADDED : பிப் 20, 2025 01:56 AM
கரூர் அம்மன் நகரில்சாலை வசதி தேவை
கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, ராமாகவுண்டனுார் பகுதியை ஒட்டி அம்மன் நகர் உள்ளது. பசுபதிபாளையம், தெரசா கார்னர், சுங்ககேட் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் அம்மன் நகர் வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
அம்மன் நகரின் இருபுறமும், அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும், இல்லாத காரணத்தால் மோசமான நிலையில் உள்ளது. அம்மன் நகரில் போதிய வடிகால் வசதி அமைக்காததாலும், சாலைகள் செப்பனிடாத காரணத்தினாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அம்மன் நகரை பார்வையிட்டு சாக்கடை வடிகால் வசதி, சாலை மேம்பாடு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

