/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை அவசியம்
/
இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை அவசியம்
இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை அவசியம்
இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை அவசியம்
ADDED : பிப் 21, 2025 12:43 AM
இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை அவசியம்
கரூர்: வேலாயுதம்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான கோழி, வாத்து இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு அனைத்து நாட்களிலும் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு சேகரமாகும் கோழி இறகு மற்றும் குடல் கழிவுகளை, கடைக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், அழுகுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அழுகிய இறைச்சி கழிவுகளை பறவைகள், நாய்கள் எடுத்து சென்று சுற்றுப்பகுதியில் போட்டு விடுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ஏற்படுகிறது.எனவே, இப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டாத வகையில் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.