/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவாயத்தில் சேமிப்பு கிடங்குஅடிக்கல் நாட்டு விழா
/
சிவாயத்தில் சேமிப்பு கிடங்குஅடிக்கல் நாட்டு விழா
ADDED : பிப் 21, 2025 12:43 AM
சிவாயத்தில் சேமிப்பு கிடங்குஅடிக்கல் நாட்டு விழா
கரூர்:குளித்தலை வட்டம், சிவாயத்தில் சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இங்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கரூர் மண்டலம் சார்பில், சேமிப்பு கிடங்கு வளாகத்தில், 1,000 மெ.டன் மற்றும் 1,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட, இரு கிடங்குகள்
ஏற்கனவே உள்ளன. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை இருப்பு வைத்திடவும், பின் நெல்லை அரவைக்கு ஆலைகளுக்கு அனுப்பி பெறப்படும் அரிசியை, இருப்பு வைத்திட ஏதுவாக, 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, 1.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்
படுகிறது. இங்கு நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், கலெக்டர் தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், குளித்தலை தாசில்தார் இந்துமதி உள்பட பலர் பங்கேற்றனர்.