/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் காமராஜ் மார்க்கெட்வணிக வளாக பணிகள் நிறைவு
/
கரூர் காமராஜ் மார்க்கெட்வணிக வளாக பணிகள் நிறைவு
ADDED : பிப் 21, 2025 12:44 AM
கரூர் காமராஜ் மார்க்கெட்வணிக வளாக பணிகள் நிறைவு
கரூர்:கரூர், காமராஜ் தினசரி மார்க்கெட் வணிக வளாகத்தில், 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் திறப்பு விழா செய்யப்
படவுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காமராஜ் தினசரி மார்க்கெட் கடந்த, 1947ல் அமைக்கப்பட்டது. அந்த கடைகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, சேதமடைந்தது. மார்க்கெட்டிற்கு புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் நீண்ட நாட்
களாக கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த 2022 மே 17ல், 6.75 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்தது.
இங்கு, 3,955 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடக்கிறது. வளாகத்தில், 26 மளிகை, 134 காய்கறி மற்றும் பழக்கடைகள் என மொத்தம், 160 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்கறி, பழக்கடைகள், 10க்கு8 சதுர அடி என்ற அளவிலும், மளிகை கடைகள், 10க்கு10 சதுர அடி என்ற அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது. 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது மின் இணைப்பு கொடுக்கும் பணி (ஒயரிங் பணி) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் திறப்பு விழா நடந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என
அதிகாரிகள் கூறினர்.காமராஜ் மார்க்கெட் புதிய வளாகம் திறந்தால், பல்வேறு சிக்கல் தீர்வதோடு, மாநகராட்சிக்கு வருமானம் வரும் என,
வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.