/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சோலார் 'கேப்' வழங்கப்படுமா?கரூர் போலீசார் எதிர்பார்ப்பு
/
சோலார் 'கேப்' வழங்கப்படுமா?கரூர் போலீசார் எதிர்பார்ப்பு
சோலார் 'கேப்' வழங்கப்படுமா?கரூர் போலீசார் எதிர்பார்ப்பு
சோலார் 'கேப்' வழங்கப்படுமா?கரூர் போலீசார் எதிர்பார்ப்பு
ADDED : மார் 02, 2025 01:33 AM
சோலார் 'கேப்' வழங்கப்படுமா?கரூர் போலீசார் எதிர்பார்ப்பு
கரூர்:கோடை காலத்தையொட்டி, வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சோலார் கேப் வழங்க வேண்டும் என, கரூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் முழுவதும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்காக அமைக்கப்பட்டுள்ள, பெரும்பாலான நிழற்கூடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், கொளுத்தும் வெயிலில் கரூர், குளித்தலை மற்றும் அரவக்குறிச்சியில் போக்குவரத்து பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ள, சோலார் கேப் வழங்கப்படாததால், கரூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் அதிருப்தியில் உள்ளனர்.
நீர்மோர் கிடைக்குமா?கடந்த, 2011ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கோடை காலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு, நாள்தோறும் நீர்மோர் வழங்க உத்தரவிட்டார். அந்த நடைமுறை கடந்த, 2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து இருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, ஒரு சில நாட்கள் மட்டும் நீர் மோர் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வழங்கியது போல, வரும் கோடை காலத்திலும் நாள்தோறும், நீர்மோர் மற்றும் எலுமிச்சம் பழம் ஜூஸ் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், போக்குவரத்து போலீசார் உள்ளனர்.