/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெங்களூருவை தமிழகத்துடன் இணைக்கபோராடுவோம்: காவிரி விவசாய சங்கம்
/
பெங்களூருவை தமிழகத்துடன் இணைக்கபோராடுவோம்: காவிரி விவசாய சங்கம்
பெங்களூருவை தமிழகத்துடன் இணைக்கபோராடுவோம்: காவிரி விவசாய சங்கம்
பெங்களூருவை தமிழகத்துடன் இணைக்கபோராடுவோம்: காவிரி விவசாய சங்கம்
ADDED : மார் 10, 2025 01:10 AM
பெங்களூருவை தமிழகத்துடன் இணைக்கபோராடுவோம்: காவிரி விவசாய சங்கம்
கரூர்:பெங்களூரு மாவட்டத்தை, தமிழகத்துடன் இணைக்க போராடுவோம் என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கர்நாடகா மாநிலத்தின் தலைநகராக உள்ள பெங்களூரு, பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக்காலத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 10ம் நுாற்றாண்டில், பெங்களூரு மாவட்டத்தின் பல பகுதிகள், காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு, பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பெங்களூரு மாவட்டத்தில் உள்ள, மகாடி பட்டிணத்தை சோழர்கள் உருவாக்கினர். பெங்களூரு மாவட்டத்தில் உள்ள பல கோவில்கள், பல்லவர்களாலும், சோழர்களாலும் கட்டப்பட்டவை.
கடந்த, 1537ல் பெங்களூரு பட்டிணத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் முன்னோர்கள், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒக்கவே வேளாளர் குடி வழிவந்தவர்கள். இதை, பல்வேறு கட்டங்களில் எழுதப்பட்ட வரலாற்று நுால்கள் உறுதி செய்கின்றன. இதனால், பெங்களூரு மாவட்ட பகுதியை, தமிழகத்துடன் இணைக்க போராடுவோம்.
பெங்களூரு குடகு, திருப்பதி ஆகிய பகுதிகள் சரித்திர சான்று தமிழகத்துக்குட்பட்டவை. இவைகளை இணைத்து, திராவிட மாநிலம் அமைக்க வேண்டும். அதில், மும்மொழி மட்டுமல்ல, தமிழோடு கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் கற்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.