ADDED : மார் 14, 2025 01:32 AM
கண்ணீர் அழுத்த நோய் குறித்த பேரணி
கரூர்:கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கண்ணீர் அழுத்தம் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மருத்துவ கல்லுாரி டீன் லோகநாயகி பேரணியை துவக்கி வைத்தார். இது குறித்து கண்துறை பேராசியர் டாக்டர் அனுராதா கூறியதாவது: கண்களில் நீர் அழுத்தம் அதிகமாக ஏற்படுவதால், பார்வை நரம்புகள் பாதிக்கின்றன. இதனால் பார்வையிழப்பு ஏற்படுகிறது. கண்களில் நீர் அழுத்த நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.