/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே கட்டப்பட்டுள்ள நகர்ப்புறசுகாதார நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பு

ADDED : மார் 20, 2025 01:14 AM
கரூர் அருகே கட்டப்பட்டுள்ள நகர்ப்புறசுகாதார நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டடத்தை (சுகாதார நிலையம்) திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., எம்.ஜி.எம்., சாலையில், பல ஆண்டுகளுக்கு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதில், கர்ப்பிணிகள், குழந்தைகள், பொதுமக்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து சென்றனர்.
இந்நிலையில், பழமை வாய்ந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தின் மேற்கூரையின் சிமென்ட் பூச்சுகள் சேதமடைந்தது. இதையடுத்து, துணை சுகாதார நிலையம் மூடப்பட்டது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கோவிந்தம்பாளையத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சேதமடைந்துள்ள பழைய துணை சுகாதார நிலைய, கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து, 30 லட்ச ரூபாய் செலவில், புதிய நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., கரூர் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய நகர்ப்புற சுகாதார நிலை யத்தை திறந்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.