/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளாஸ்டிக் பொருட்களை போட நவீனஇயந்திரம்: ரயில்வே ஸ்டேஷனில் பழுது
/
பிளாஸ்டிக் பொருட்களை போட நவீனஇயந்திரம்: ரயில்வே ஸ்டேஷனில் பழுது
பிளாஸ்டிக் பொருட்களை போட நவீனஇயந்திரம்: ரயில்வே ஸ்டேஷனில் பழுது
பிளாஸ்டிக் பொருட்களை போட நவீனஇயந்திரம்: ரயில்வே ஸ்டேஷனில் பழுது
ADDED : மார் 25, 2025 12:41 AM
கரூர்:காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போட வசதியாக, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப்பட்ட நவீன இயந்திரம் பழுதடைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் கடந்த, 2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் விழிப்புணர்வு பணிகளும் நடந்து வருகிறது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி, உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடந்தது. மேலும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட டம்ளர், தட்டு ஆகியவற்றை போட வசதியாக, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், சில மாதங்
களுக்கு முன் நவீன இயந்திரம் வைக்கப்பட்டது. அதில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தபட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப்பட்ட நவீன இயந்திரம், தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, அதில் போட முடியவில்லை. இதனால், பயணிகள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களை, பிளாட்பாரம் மற்றும் ரயில்வே இருப்பு பாதையில் வீசி விடுகின்றனர். எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சேதமடைந்த, நவீன இயந்திரத்தை உடனடியாக சீரமைக்க வேண்டியது அவசியம்.