/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ்வார சந்தைகள் ஏலம் விடும் பணி
/
கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ்வார சந்தைகள் ஏலம் விடும் பணி
கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ்வார சந்தைகள் ஏலம் விடும் பணி
கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ்வார சந்தைகள் ஏலம் விடும் பணி
ADDED : மார் 28, 2025 01:11 AM
கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ்வார சந்தைகள் ஏலம் விடும் பணி
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகத்தில், வாரச்சந்தை ஏலம் விடும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகத்துக்கு உட்பட்டு, மாயனுார், லாலாப்பேட்டை, கொசூர், இரும்பூதிப்பட்டி ஆகிய இடங்களில், கால்நடை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கான வாரச்சந்தை செயல்படுகிறது.
நேற்று சந்தைகளுக்கு ஏலம் விடும் பணி நடந்தது. இதில், லாலாப்பேட்டை சந்தை ஏலத்தின் மதிப்பு, 4.30 லட்சமாக இருந்ததால் யாரும் கேட்க வில்லை. இதனால் இந்த சந்தை, எப்போதும் போல யூனியன் நிர்வாகத்தின் மேற்பார்வையில் இயங்கும்.
மாயனுார் வாரச்சந்தை, இரண்டு லட்சத்து, 80 ஆயிரத்து, 500 ரூபாய், கொசூர் வாரச்சந்தை, ஒரு லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஏலத்தில் விடப்பட்டது.
ஏலத்தில் சந்தை எடுத்தவர்கள் அதற்கான பணம் கட்டி ரசீது பெற்று கொண்டனர். ஏலத்தில், 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஏலம் விடும் பணிகளை, கிருஷ்ணராயபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், முருகேசன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.