/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புத்தாக்க அறிவியல் போட்டியில் தேர்வுகரூர் வ.உ.சி., மாணவியருக்கு பாராட்டு

ADDED : ஏப் 01, 2025 02:09 AM
புத்தாக்க அறிவியல் போட்டியில் தேர்வுகரூர் வ.உ.சி., மாணவியருக்கு பாராட்டு
கரூர்:மத்திய அரசு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சமூகத்திற்கு பயன்படக்கூடிய, சிறந்த அறிவியல் ஆய்வு சிந்தனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்கள் வங்கிக் கணக்கில், 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
இந்த அறிவியல் போட்டியில், கரூர் வ.உ.சி. அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், இரண்டு சிறந்த அறிவியல் சிந்தனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியர் ஜான்சன் ஜெபராஜ் வழிகாட்டுதலின்படி, ஏழாம் வகுப்பு மாணவி பர்நிகா கண்டுபிடிப்பான, ரயிலில் தானாகவே கழிவறை சுத்தம் செய்தல்.
மற்றொரு ஏழாம் வகுப்பு மாணவி வேணு ஸ்ரீ கண்டுபிடிப்பான தொழிற்சாலையில் புகைகளை உறிஞ்சி சுத்தம் செய்தல் ஆகிய இரண்டு கண்டு
பிடிப்புகள் தேர்வாகியுள்ளன. போட்டியில் வெற்றி பெற்றவர்களை பள்ளி தலைவர் சோபியா ரூவினா, வட்டார கல்வி அலுவலர் அழகேசன், மணிமாலா, தலைமை ஆசிரியர் ஜான்சன் ஜெபராஜ் உள்பட பலர் பாராட்டினர்.