sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'முருங்கையை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம்'

/

'முருங்கையை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம்'

'முருங்கையை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம்'

'முருங்கையை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம்'


ADDED : ஏப் 04, 2025 01:15 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முருங்கையை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம்'

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கண்ணையன், 65, தனது, 10 ஏக்கர் நிலத்தில் முருங்கையை பயிரிட்டு, நல்ல மகசூல் எடுத்து வருகிறார். முருங்கை காய்களை நேரடியாக விற்பதோடு, அதை மதிப்பு கூட்டி சூப் பவுடர், சாதப்பொடி, இட்லி பொடி, முருங்கை லட்டு, பிஸ்கட் என பல பொருட்களை தயாரித்து வருகிறார்.

இது குறித்து, விவசாயி கண்ணையன் கூறியதாவது: நான், 15 ஆண்டுகளாக முருங்கை விவசாயம் செய்கிறேன். முருங்கை காய், இலைகள்தான் பெருமளவில் விற்பனையாகும். ஆனால், அதுவும் கூட சில நாட்களில் விலை இல்லாமல் போகும். நிரந்தர விலை முருங்கைக்கு இல்லை என்பதால், மதிப்பு கூட்டி விற்றால் உறுதியான லாபம் பெறலாம் என, நினைத்து இந்த தொழிலை தொடங்கினேன். மதுரை வேளாண் பல்கலையில் பணிபுரியும் பார்வதி, ஜோதி ஆகியோரோடு சேர்ந்து, ஒரு கூட்டு முயற்சியாக தொடங்கினோம்.

முருங்கையை எப்படி மதிப்பு கூட்டுவது, சந்தைப்படுத்தும் முறை, மதிப்பு கூட்டலுக்கு தேவையான பொருட்களை எப்படி மானியத்தில் பெறுவது என, அனைத்து தரவுகளையும் தெரிந்து கொண்டோம். அதன் அடிப்படையில், இப்போது நல்ல முறையில் மதிப்பு கூட்டல் செய்து லாபம் பார்த்து வருகிறோம். எனது, 10 ஏக்கர் நிலத்தில் நாட்டு முருங்கை, செடி முருங்கை, கரும்பு முருங்கை என மூன்று வகையாக பயிரிட்டு வருகிறேன்.

முருங்கை இலை, முருங்கை காய்களில் இருந்து சூப் பவுடர், சாதப்பொடி, இட்லி பொடி, முருங்கைப்பால், முருங்கை லட்டு, பிஸ்கட், பலவகையான சத்து மாவு, குழந்தைகளுக்கு தேவையான இனிப்பு

தயாரிக்கிறோம். இப்போது வளர்கிற குழந்தைகளுக்கு கீரையை பற்றிய மகத்துவமோ, அதன் சத்தை பற்றிய தெளிவோ தெரிவதில்லை. அதனால் கீரையை நேரடியாக கொடுக்காமல், மதிப்பு கூட்டல் பொருட்களின் மூலம் இனிப்பாகவும், எனர்ஜி ட்ரிங்க் ஆகவும் கொடுக்கலாம்.

பத்து கிலோ முருங்கை இலையில் இருந்து, 1 கிலோ வரை சூப் பவுடர் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, முருங்கை காய்களில் இருந்து அதன் சதை பகுதியை மட்டுமே எடுத்து முருங்கைப்பால் தயாரிக்கப்படுகிறது. முருங்கை இலைகளை பறித்து, நன்றாக காய வைத்து பயன்படுத்துகிறோம். காய்களை முதலில் வேகவைத்து, மூன்று நாட்கள் வரை உலர விடுவோம். அதன்பிறகு அதை மதிப்பு கூட்டலுக்கு பயன்படுத்துவோம்.

மதிப்பு கூட்டிய பொருட்களை, நேரடியாக எங்களிடம் வாங்கி செல்கின்றனர். பல இடங்களில் உள்ள ஆர்கானிக் ஸ்டோர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். பல ஊர்களில் விவசாயிகளுக்கு, மதிப்பு கூட்டல் பற்றிய பயிற்சி வழங்கி வருகிறேன்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், எனக்கு தனியாக ஸ்டால் வழங்கப்பட்டுள்ளது. அதில் மதிப்பு கூட்டல் பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறோம். எந்த விவசாயமாக இருந்தாலும், நேரடி விற்பனையை விட மதிப்பு கூட்டி விற்கும்போதுதான் அதிக லாபம் கிடைக்கிறது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us