/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளிக்குவிருது: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

ADDED : ஏப் 05, 2025 01:46 AM
பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளிக்குவிருது: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
கரூர்:சிறந்த சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான விருது பெற்ற, கரூர் பரணி வித்யாலயா பள்ளியில், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பிரெயின் பீட் என்ற தனியார் நிறுவனம், சிறந்த பள்ளிகளுக்கான கள ஆய்வை சமீபத்தில் நடத்தியது. அதில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி, மத்திய அரசின் பொதுத்தேர்வு முடிவுகளில் தொடர் தேசிய சாதனை, கற்றல், கற்பித்தலில் புதுமை செயல்பாடு,
கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், விருது பெற்று மாநில அளவில் சிறந்த பள்ளியாக, பரணி வித்யாலயா பள்ளி தேர்வு செய்து,விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டில் சிறப்பு கல்வியாளருக்கான விருது, விளையாட்டு, அறிவியல், ஒலிம்பியாட், பன்முகத்திறன் திருவிழா என, அனைத்திலும் சர்வதேச, தேசிய, மாநில சாதனைகளை பரணி வித்யாலயா பள்ளி பெற்றுள்ளது.
இதையடுத்து, பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகரங்கன் தலைமையில், ஆசிரியர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. அதில், பள்ளி செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.