/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுாரில் பலத்த மழையால் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு
/
மாயனுாரில் பலத்த மழையால் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு
மாயனுாரில் பலத்த மழையால் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு
மாயனுாரில் பலத்த மழையால் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு
ADDED : ஏப் 09, 2025 01:22 AM
மாயனுாரில் பலத்த மழையால் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு
கரூர்:கரூர் அருகேயுள்ள, மாயனுாரில் பலத்த மழை காரணமாக சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நடந்தது.
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. கரூர் மாவட்டத்திலும் கடந்த 7ல் இரவு, 7:00 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கிருஷ்ணராய
புரத்தில், -53.50 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதில், மாயனுார் கதவணை அருகில் செல்லாண்டியம்மன் கோவிலை ஒட்டி காவிரி கரையோரம், லெட்சுமணப்பட்டி, திருக்காம்புலியூர், சேங்கல், பழைய ஜெயங்கொண்டம் உள்பட பல்வேறு பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின் மாற்றியும் சேதமடைந்து விட்டதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை செய்தனர்.
மின் ஊழியர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாய்ந்த மின் கம்பங்கள் நிமிர்த்தப்பட்டன. சில மின்கம்பங்களின் அடிப்பாகம் சேதமடைந்து விட்டது. அந்த மாதிரியான மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்டது. மின் மாற்றிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதிகளில், மின்கம்பங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வது மின்வாரிய ஊழியர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. நேற்று மாலை பணிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.