/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உரிய அனுமதியுடன் குவாரி பணிகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
/
உரிய அனுமதியுடன் குவாரி பணிகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
உரிய அனுமதியுடன் குவாரி பணிகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
உரிய அனுமதியுடன் குவாரி பணிகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
ADDED : ஏப் 12, 2025 01:27 AM
கரூர்,கரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல், குவாரி பணிகள் மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், குவாரி மற்றும் கனிம குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டு, குவாரி பணிகள் நடக்கிறது. குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்து செல்ல ஏதுவாக, இசைவாணை சீட்டு இணையதளம் வழங்கும் நடைமுறை கடந்த, செப்., 2024 முதல் அமலில் உள்ளது.
இந்நிலையில், வாகனங்களில் ஏற்றி செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக, கனிமம் எடுத்து செல்வதை தடுக்கவும், வாகனங்களுக்கு நடை சீட்டை இணையதளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-பர்மிட் வழங்கும் நடைமுறை கடந்த பிப்., 25 முதல் அமலில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 முதல் அரசு புறம்போக்கு மற்றும் தனி நபர் பட்டா நிலங்களில் கனிமங்களுக்கு, கல்குவாரி குத்தகை உரிமை, அனுமதிகோரும் விண்ணப்பங்கள் mimas.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பித்து, பரிசீலித்து அனுமதி வழங்கப்பட உள்ளது.
இணையதளம் வழியாகவே, சுரங்க நிலுவை தொகை சான்றுகள் கூறும், விண்ணப்பங்
களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில், விதிகளுக்குட்பட்டு குவாரி பணிகள் மேற்கொள்ளவும், வாகன ஓட்டுனர்கள் உரிய அனுமதி சீட்டும், உரிய போக்குவரத்து சீட்டும் பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும். வாகன தணிக்கையின் போது, அவற்றை வைத்திருக்க வேண்டும்.
உரிய அனுமதி இல்லாமல், குவாரி பணிகள் மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.