/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட10 மாணவ, மாணவியருக்கு வாந்தி
/
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட10 மாணவ, மாணவியருக்கு வாந்தி
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட10 மாணவ, மாணவியருக்கு வாந்தி
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட10 மாணவ, மாணவியருக்கு வாந்தி
ADDED : மார் 06, 2025 01:49 AM
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட10 மாணவ, மாணவியருக்கு வாந்தி
குளித்தலை:குளித்தலை அருகே, மேட்டு மகாதானபுரம் யூனியன் நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 10 மாணவ, மாணவியருக்கு வாந்தி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரம் கிராமத்தில், யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 74 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் நேற்று மதியம், வழங்கப்பட்ட தக்காளி சாதத்தை, 63 மாணவ, மாணவியர் சாப்பிட்டனர். இதில் ஏழு மாணவியர், மூன்று மாணவர்கள் சரிவர வேகாத தக்காளி சாதத்தை சாப்பிட்டதாலும், பாத்திரத்தின் அடிப்பகுதி தீஞ்சு போனதாலும் வாந்தி ஏற்பட்டு சோர்வடைந்தனர்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக கிருஷ்ணராயபுரம் யூனியன் கமிஷனர்கள் முருகேசன், தங்கராஜ் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை பார்த்த அவர்கள், அரசு வாகனத்தில் ஏற்றி கோவக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர் அருண் பிரசாத் தலைமையில், சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்த பெற்றோர்கள், பள்ளியில் இருந்த ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது, சரிவர பதில் சொல்லாததால், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, மருத்துவமனை ஊழியர்கள், பெற்றோர்களை அனுமதிக்க மறுத்தனர்.
'எங்களுக்கு தெரிவிக்காமல், எப்படி மாணவ, மாணவியரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தீர்கள், பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது' என, விளக்கம் கேட்டு பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை முடிந்த பின், 10 மாணவ, மாணவியரை தாசில்தார் பிரபாகரன், அரசு வாகனத்தில் அழைத்து சென்று வீட்டில் விட்டார்.