ADDED : ஜன 10, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், : கரூர்-திருச்சி  நெடுஞ்சாலை கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆகிய சாலையோரம், மழை நீர் செல்லும் கால்வாய் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பழைய சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய சிமென்ட் சிலாப்புகள் மேல் புறம் பகுதியில் அமைக்கப்பட்டது.
சிலாப்புகள் அமைக்க பயன்படுத்தப்பட்ட சிமென்ட் கலவைகளின் மீதமுள்ள கழிவு, அருகில் உள்ள சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ளது.
கழிவு கலவையால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சிமென்ட் கழிவுகளை அகற்ற நெடுஞ்
சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

