/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் தாலுகா அலுவலகத்தில்பொங்கல் விளையாட்டு போட்டி
/
புகழூர் தாலுகா அலுவலகத்தில்பொங்கல் விளையாட்டு போட்டி
புகழூர் தாலுகா அலுவலகத்தில்பொங்கல் விளையாட்டு போட்டி
புகழூர் தாலுகா அலுவலகத்தில்பொங்கல் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 17, 2025 01:45 AM
புகழூர் தாலுகா அலுவலகத்தில்பொங்கல் விளையாட்டு போட்டி
கரூர்,: புகழூர் தாலுகா அலுவலகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு, விளையாட்டு போட்டி நடந்தது. தாசில்தார் தனசேகரன் தலைமை வகித்தார். கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். புகழூர் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சவுந்தரவல்லி உள்பட பலர் பங்கேற்றனர்.
* நொய்யல் அருகே மரவாபாளையம் தமிழன் மன்றம் சார்பில், 57ம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டு விழா நடந்தது. மாட்டு பொங்கலன்று சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கண்கட்டி கப்பு பொருத்துதல், கபடி போட்டி, பிஸ்கட் சாப்பிடும் போட்டி, பெண்களுக்கான பலுான் உடைக்கும் போட்டி, முறுக்கு கடிக்கும் போட்டி உள்ளிட்ட, 30-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.
நேற்று கும்மி, கோலாட்டம் நடந்தது. மாலையில் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரிக்கரை விழாவை கொண்டாடினர். கரையில் அமர்ந்து, தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த, பல்வேறு வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர் . பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
* குளித்தலை அடுத்த, மேட்டு மருதுார் கிராமத்தில், 33ம் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. ஓட்ட பந்தயம், வாலிபால், கபடி, சைக்கிளில் மெதுவாக செல்லுதல், பானை உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஊசி நுால் கோர்த்தல், பாட்டு போட்டி, நடன போட்டி, கவிதை போட்டி, கோலப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவக்குளம், மேட்டுப்பட்டி, வயலுார், பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, மகாதானபுரம் ஆகிய இடங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு, பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி, சாக்கு போட்டி, முறுக்கு கடித்தல், பாட்டில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று பரிசுகளை பெற்று சென்றனர்.