/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலரில் சென்றவர்கீழே விழுந்து உயிரிழப்பு
/
டூவீலரில் சென்றவர்கீழே விழுந்து உயிரிழப்பு
ADDED : ஜன 18, 2025 01:24 AM
டூவீலரில் சென்றவர்கீழே விழுந்து உயிரிழப்பு
அரவக்குறிச்சி,: அரவக்குறிச்சி அருகே, வெங்கடாபுரம் சொக்கன் காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் விவேகானந்தன், 45; இவர், மலைக்கோவிலுாரில் இருந்து, வெங்கடாபுரம் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு டூவீலரில், பொய்யேறிப்பள்ளம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டூவீலரில் இருந்து விவேகானந்தன் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த விவேகானந்தனை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே விவேகானந்தன் உயிரிழந்தார். அவரது மனைவி நதியா கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.