/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண்மங்கலம் பிரிவில் மேம்பாலம்பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
/
மண்மங்கலம் பிரிவில் மேம்பாலம்பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
மண்மங்கலம் பிரிவில் மேம்பாலம்பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
மண்மங்கலம் பிரிவில் மேம்பாலம்பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
ADDED : ஜன 18, 2025 01:26 AM
கரூர், : விபத்துகள் அதிகளவில் நடந்த, மண்மங்கலம் பிரிவில், கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, திருச்சி சாலை கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் பிரிவு, சேலம் தேசிய நெடுஞ்சாலை பெரிச்சிப் பாளையம் பிரிவு, செம்மடை பிரிவு, மண்மங்கலம் பிரிவு மற்றும்
தவிட்டுப்பாளையம் பிரிவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு,
சிலர் உயிரிழந்துள்ளனர். பலர்
காயமடைந்துள்ளனர்.
இதனால், குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளில், மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, 10 ஆண்டு களுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து கடந்த, 2019ல் பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, பெரிச்சிப்பாளையம் பிரிவு, செம்மடை, தவிட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், மேம்பாலம் கட்டும் பணிகள், தொடங்கி நிறைவு பெற்று தற்போது, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
அதேபோல், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகள்
அதிகளவில் நடந்து வரும்,
மண்மங்கலம் மேம்பாலம் பிரிவில் கடந்தாண்டு, உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது.
தற்போது, பணி நிறைவு பெற்ற தால் மண்மங்கலம் பிரிவில், உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மண்மங்கலம் பிரிவில் விபத்துகள் நடப்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மண்மங்கலம் பிரிவில், உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்
பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார்
பகுதிகளை இணைக்கும், முக்கிய பகுதியாக உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.