ADDED : ஜன 25, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்; தந்தை புகார்
குளித்தலை, :குளித்தலை அடுத்த, காளியாளம்பட்டி கோட்டையார் குளத்தை சேர்ந்த சரவணன், 45, கூலி தொழிலாளி.இவரது மகள் ரோஷினி தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 2:15 மணியளவில் வீட்டில் இருந்த ரோஷினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும்,
எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து, தந்தை கொடுத்த புகாரின்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து,
கல்லுாரி மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.