/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது பஸ் மோதிதொழிலாளி படுகாயம்
/
பைக் மீது பஸ் மோதிதொழிலாளி படுகாயம்
ADDED : பிப் 01, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மீது பஸ் மோதிதொழிலாளி படுகாயம்
குளித்தலை: குளித்தலை அடுத்த புத்துார் பஞ்., கரையான் பட்டியை சேர்ந்தவர் கனகராஜ், 19; கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 29ல் பைக்கில், தோகைமலை - திருச்சி நெடுஞ் சாலையில், தோப்புப்பட்டி பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பஸ், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கனகராஜ் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், கனகராஜை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.