/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஆண்டு விழா
/
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 01, 2025 12:51 AM
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஆண்டு விழா
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் உஷாராணி முன்னிலை வகித்தார். அரவக்குறிச்சி எஸ்.ஐ., ராஜா சேர்வை, பரோடா வங்கி மேலாளர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளியில் இருந்து பணிமாறுதலில் சென்ற முன்னாள் தலைமை ஆசிரியர் உமா, ஆங்கில ஆசிரியர் திருமலைசாமி, பணி ஓய்வு பெற்ற புனிதா ஆகிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமையாசிரியர் வாசித்தார். தேர்வு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அரவக்குறிச்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில், ஆண்டுதோறும், 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியடைந்து வருகிறது. தற்போது, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதனால், பள்ளியை தரம் உயர்த்தி, பிளஸ் 2 வரை செயல்பட வேண்டும் என, பெற்றோர், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.