/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : பிப் 01, 2025 12:52 AM
அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் ரெத்தினம் தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு, கலை இலக்கியம் மற்றும் பண்பாடு, பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவியரின் பரதநாட்டியம், நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ராதிகா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அபிநயா, முதுகலை ஆசிரியை தமிழ்பொன்னி, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்வேலன், பட்டதாரி ஆசிரியர் பானுமதி மற்றும் ஆசிரியர்கள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.