/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி
/
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி
ADDED : பிப் 01, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி
கரூர்: கரூர் ராமானுஜம் நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன், 55; இவர், அதே பகுதியில் புதிதாக கட்டடம் கட்டி வந்தார். அதில், நேற்று முன்தினம் புதிய சுவருக்கு பைப் மூலம், தண்ணீர் அடிக்கும் பணியில் இருந்தார். அப்போது, பைப் எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியது. அதில், மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த மணிவண்ணன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சையின் போது உயிரிழந்தார். உயிரிழந்த மணிவண்ணனின் மகன் ராகுல், 25; கொடுத்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.