/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அவசர கதியில் போட்டதார் சாலையால் அவதி
/
அவசர கதியில் போட்டதார் சாலையால் அவதி
ADDED : பிப் 05, 2025 01:14 AM
அவசர கதியில் போட்டதார் சாலையால் அவதி
குளித்தலை : குளித்தலை அருகே, அவசர கதியில் போட்ட தார் சாலையை, செப்பனிட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூசத்திருவிழா வரும், 11ல் நடைபெறுகிறது. இந்நிலையில், நகராட்சி பொது நிதியில் இருந்து தார் சாலை அமைக்கும் பணி, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, ஆமை வேகத்தில் நடந்தது. சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தைப்பூச திருவிழாவையொட்டி, புதிய தார் சாலை பணி கடந்த இரண்டு நாட்களில் அவசர கதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை பணி தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.