/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானாவாரி நிலங்களில் கொள்ளு விளைச்சல் அமோகம்
/
மானாவாரி நிலங்களில் கொள்ளு விளைச்சல் அமோகம்
ADDED : பிப் 05, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாவாரி நிலங்களில் கொள்ளு விளைச்சல் அமோகம்
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொள்ளு செடிகள் விளைச்சல் கண்டு வருகிறது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வீரியபாளையம், கண்ணமுத்தாம்பட்டி, சுக்காம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, கோவக்குளம் ஆகிய பகுதிகளில பரவலாக மானாவாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த செடிகளுக்கு மழை காலங்களில் மழை நீர் கிடைத்தது. அதன் மூலம் செடிகள் செழிப்பாக வளர்ந்து கொள்ளு செடிகளில் விளைச்சல் கண்டுள்ளது. சில வாரங்களில் கொள்ளு அறுவடை செய்யப்படவுள்ளது.