ADDED : பிப் 08, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோசமான தார் சாலைமக்கள் அவஸ்தை
கிருஷ்ணராயபுரம்: சரவணபுரம் பகுதியில் இருந்து, அய்யர்மலை வரை செல்லும் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சரவணபுரம் பகுதியில் இருந்து அய்யர்மலை வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக, அய்யர்மலை கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக வாகனங்களில் செல்கின்றனர். தற்போது சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் செல்லும்போது, சில வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சேதம் ஏற்பட்டுள்ள தார் சாலையை புதுப்பிக்க, கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.