/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்ட விரோதமாக மது விற்பனைசெய்தவர் கைது
/
சட்ட விரோதமாக மது விற்பனைசெய்தவர் கைது
ADDED : பிப் 13, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்ட விரோதமாக மது விற்பனைசெய்தவர் கைது
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு, 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரவக்குறிச்சி போலீசார், மணல்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த சரவணன், 43, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த, 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.