/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தைப்பூச திருவிழா சுவாமிகள்: விடையாற்றி நிகழ்ச்சி
/
தைப்பூச திருவிழா சுவாமிகள்: விடையாற்றி நிகழ்ச்சி
ADDED : பிப் 13, 2025 01:13 AM
தைப்பூச திருவிழா சுவாமிகள்: விடையாற்றி நிகழ்ச்சி
குளித்தலை: குளித்தலையில், தைப்பூச திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக, சோமசஸ்கந்தர் சுவாமிகள் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.
குளித்தலை, கடம்பன்துறை காவிரி ஆற்றில் தைப்பூச தினத்தன்று குளித்தலை, அய்யர்மலை, ராஜேந்திரம், கருப்பத்தார், முசிறி, திருஈங்கோய்மலை, வெள்ளூர், பெட்டவாய்த்தலை உள்ளிட்ட எட்டு ஊர் சிவாலயம், சோமஸ்கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
நேற்று முன்தினம் மாலை சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சியும், சூல அஸ்திர தேவர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, ஒரே இடத்தில் சோமஸ்கந்தர்கள் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கரூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இரண்டாம் நாளான நேற்று காலை சுவாமிகள் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டு ஊர் சுவாமிகள் தீபாராதனையுடன் திருவிழாவில் விடைபெற்று தங்கள் கோவில்களுக்கு திரும்பினர். திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் செயல் அலுவலர்கள் தீபா, சித்ரா, மேனகா, நித்யா, தங்கராஜீ மற்றும் அரசு அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.