/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில்கம்பு சாகுபடி பணி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில்கம்பு சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்கம்பு சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்கம்பு சாகுபடி பணி தீவிரம்
ADDED : பிப் 15, 2025 02:02 AM
கிருஷ்ணராயபுரம் பகுதியில்கம்பு சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்புகளை, அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சரவணபுரம், லட்சுமணம்பட்டி, வேங்காம்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, வயலுார், பஞ்சப்பட்டி பகுதிகளில் பரவலாக விவசாயிகள் மானாவாரி நிலங்களில், கம்பு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக, பயிர்கள் பசுமையாக வளர்ந்து கம்பு விளைச்சல் கண்டுள்ளது.
விளைந்த கம்பு கதிர்களை, தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கம்பு கதிர்கள் அறுவடை செய்து தரம் பிரிக்கும் பணி, விவசாய களத்தில் நடந்து
வருகிறது.